எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

'எம்.ஜி.ஆர் சார் படம் பார்க்காமல் வீட்டுக்கு போகக்  கூடாது!' 

பெங்களூரில் "நான் ஆணையிட்டால்" படம் திரையிடப்பட்டது. எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் சார் நடித்த திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியே  பாத்து  விட வேண்டும் என்று எனக்கு ஒரு வித ஏக்கம். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

பெங்களூரில் "நான் ஆணையிட்டால்" படம் திரையிடப்பட்டது.

எப்படியாவது மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் சார் நடித்த திரைப்படத்தை முதல் நாள், முதல் காட்சியே  பாத்து  விட வேண்டும் என்று எனக்கு ஒரு வித ஏக்கம். 

பகல்  3 மணிக் காட்சிக்கு காலை 7 மணிக்கே போய்  டிக்கெட் கவுண்டர் முன்னால் வரிசையில் நின்றேன். நேரம் செல்லச் செல்ல கூட்டம் பெருகியது. கியூ வரிசை நீண்டு கொண்டே போனது. டிக்கெட் கொடுக்கும் சமயத்தில் கூட்டம் அதிகமாகி அலைமோதியது. 

எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இன்றைக்கு எம்.ஜீ.ஆர் சார் படம் பார்க்காமல் வீட்டுக்கு போகக்  கூடாது என்று ஒரு பிடிவாதம் எழுந்தது.  

ஒரு ஆள் ப்ளாக்கில் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தான். அவனைச் சூழ்ந்து கொண்டு ஒரு கூட்டம் நின்று கொண்டிருந்தது. ஒரு ரூபாய் பத்து காசு டிக்கெட் விலை 15 ரூபாய். மற்றவரக்ள் யோசிப்பதற்கு முன்பு பையில் கையை விட்டு பணத்தை எடுத்து நீட்டினேன்.  

எப்படியாவது பார்த்தே தீருவது என்ற பிடிவாதத்துக்கு வெற்றி கிடைத்த்து விட்டது.  

படம் பார்த்து முடிக்கும்வரை ஒரே குஷிதான். அப்புறம்.?

வீட்டிற்கு எப்படி திரும்பி போவதென்ற பயம்.

மளிகை சாமான்கள் வாங்குவதற்காக வீட்டில் கொடுத்த 15 ரூபாயையும் ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து செலவழித்து விட்டேன். 

எதிர்பார்த்தது வீட்டில் தாராளமாக கிடைத்தது. செமத்தியான அடி  உதைதான்..!

சினிமா எக்ஸ்பிரஸ் 15.01.82 இதழ்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.